கருணாநிதி கேட்டு கொண்டதால் ஸ்டாலினுடன் இருக்கிறோம்: வைகோ

24

திருப்பூர்: திருப்பூரில் நடந்த ஆறு மாவட்டத்தை உள்ளடக்கிய கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறியதாவது:


ஒவ்வொரு ஆண்டும் செப்., 15ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை, சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.



அந்த அடிப்படையில், இந்த ஆண்டு, திருச்சியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. கூட்டணியில் உள்ள கம்யூ., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. அவற்றை போன்று நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நாங்கள் கூட்டணி தர்மத்தை பின்பற்றுகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி படுக்கையில் இருந்தபோது, அவரை சந்தித்தேன். அவர், ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார்.


அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில்தான், தி.மு.க., கூட்டணியில் இன்றுவரை இயங்கி வருகிறோம். அதனாலேயே, தமிழக அரசை எதிர்த்து சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதில்லை; கண்டன அறிக்கைகூட விட்டதில்லை. தேர்தலில் இத்தனை 'சீட்' கட்டாயம் தேவை என கேட்டதுமில்லை.



தேர்தல் சமயத்தில் கூட்டணி பேச்சுக்கு, தி.மு.க., தலைமை எங்களை அழைக்கும்போது மட்டும், அதுகுறித்து பேசுவோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement