கம்யூனிஸ்ட் பைத்தியம் நியூயார்க் நகரை அழிக்க விடமாட்டேன்: அதிபர் டிரம்ப் ஆவேசம்

6

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி உள்ளார்.



தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் என்பவர் நியூயார்க் மேயராக உள்ளார். வரும் நவம்பரில் நடக்க உள்ள மேயர் தேர்தலில், இவர் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டார்.


இதன் வாயிலாக, நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்திய வம்சாவளி வேட்பாளரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி வருகிறார். அந்த வகையில் இன்று சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


அமெரிக்க அதிபராக, இந்த (ஜோஹ்ரான் மம்தானி) கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன் நியூயார்க்கை அழிக்க நான் விடப் போவதில்லை. நான் உறுதியாக இருகிறேன். எல்லா சக்திகளையும் என்னிடம் வைத்திருக்கிறேன். நான் நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றுவேன். நல்ல பழைய அமெரிக்காவைப் போலவே, அதை மீண்டும் சிறந்த நகரமாக மாற்றுவேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement