ஸ்ரீஅய்யப்பன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவில் கும்பாபி ேஷக விழா, சபரிமலை கண்டரு மோகனரு தந்திரி தலைமையில் நேற்று கோலாகலமாக நடந்தது.

திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா, கடந்த மாதம், 27ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.

தினமும் அதிகாலை மஹா கணபதி ேஹாமம், உஷ பூஜை, கலசபூஜை, சாந்தி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தந்திரிகளின் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. அதிகாலை, மஹா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. காலை, 6:10 மணி முதல், 7:20 மணிக்குள், அஷ்டபந்தன மருந்து சார்த்தி, மஹா கும்பாபிேஷகம் நடந்தது.

சபரிமலை பிரதம தந்திரி, கண்டரு மோகனரு தந்திரி, கண்டரு மகேஷ் மோகனரு தந்திரிகள் தலைமையில், கும்பாபிேஷக விழா நடந்தது. பக்தர்களின், 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷத்துடன், கோபுர கலசத்தக்கு, தந்திரிகள் புனித தீர்த்தம் ஊற்றி, கும்பாபிேஷகம் செய்தனர். விழாவையொட்டி, கோவிலுள்ள அனைத்து சன்னதிகள் மற்றும் கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, 41 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடக்க உள்ளது.

கும்பாபி ேஷக விழாவையொட்டி, சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீஅய்யப்ப பக்த ஜன சங்கம், ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement