இரட்டிப்பு பண மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார் தர அழைப்பு

சேலம், கள்ளக்குறிச்சி மாவட் டம் தியாகதுருவத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சத்தியபாமா. இவர்கள் உள்பட பலர், 2023ல், சேலம், ஸ்வர்ணபுரியில், 'ரீ கிரியேட் பியூச்சர்' பெயரில் தனியார் நிறுவனம் நடத்தினர். அப்போது பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக அறிவிக்க, அதை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினர்.

ஆனால் குறிப்பிட்டபடி, பணம் திருப்பித்தரவில்லை. இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர் அளித்த புகார்படி, ராஜேஷ், சத்தியபாமா உள்பட, 4 பேரை, பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்கலாம் என, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement