ஒரு மாதம் 'உங்களுடன் ஸ்டாலின்' ; ஜூலை 15 முதல் ஆக.15 வரை நடக்கிறது
மதுரை; மதுரை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் ஜூலை 15ல் துவக்கி ஆக., 15 வரை நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசின் 'உங்களுடன் முதல்வர்' திட்டத்தில் பொதுமக்களுக்கு முகாம் நடத்தி மனுக்கள் பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இத்திட்டம் தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' என புதுவடிவம் பெற்று இந்தாண்டு நடத்தப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இத்திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க அரசு தீவிரம்காட்டி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முகாம் நடக்கும் முன்பு வீடுவீடாக சென்று சான்றுகள், அரசின் திட்டங்களை பெறுவதற்கான படிவங்களுடன் சந்திக்க வேண்டும். மக்களிடம் முகாம் குறித்து எடுத்துக் கூற வேண்டும். ஒரு வீடுகூட விடுபட்டு விடக் கூடாது. இதற்காக தன்னார்வலர்களை நியமிக்கலாம் என முடிவானது.
மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தவரை அவர்கள் முகாமுக்கு வரும்போது மட்டுமே படிவம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும்
-
மத்திய அமைச்சர்கள் மீது மோடி கோபம்
-
மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: 'ரிட்டையர்' ஆகிறாரா ஸ்மிருதி?
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 7.62 லட்சம் மோசடி திருவண்ணாமலை தம்பதி மீது வழக்கு
-
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் போலீஸ் பைக்கில் இருந்து குதித்து தப்பியோட்டம்