கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரு வாலிபர்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பரிகம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 3 நபர்களிடம் விசாரிக்க சென்றனர். அப்போது, போலீசார் வருவதை பார்த்து, ஒருவர் தப்பியோடினார். மீதமுள்ள 2 பேரை போலீசார் சோதனை செய்ததில் 500 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், காரனுார் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நிர்மல்ராஜ், 25; பரிகம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராமர், 24; என்பதும், தப்பியோடியது லட்சுமணன் மகன் மணிகண்டன் (எ) சிலம்பரசன் என்பதும் தெரிந்தது. நிர்மல்ராஜ், ராமர் ஆகிய இருவரை கைது செய்து, 500 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமதல் செய்தனர்.

Advertisement