மாவட்ட பிரதிநிதி மாநாடு

விருதுநகர்: விருதுநகரில் இந்திய கம்யூ.,வின் மாவட்ட பிரதிநிதி மாநாடு நடந்தது. கட்சியின் மூத்த உறுப்பினர் பழனிக்குமார் கட்சிக் கொடி ஏற்றினார். மாவட்ட துணை செயலாளர் சமுத்திரம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தெற்கு ஒன்றிய செயலாளர் சக்கணன் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட செயலாளர் லிங்கம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சுப்பாராயன், தேசியக் குழு உறுப்பினர் ராமசாமி பேசினர். மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் காதர் முகையதீன், ஆதிமூலம், பாலச்சந்திரன் கவுரவிக்கப்பட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், அழகிரிசாமி ,நகர செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டனர். புதிய மாவட்ட செயலாளராக செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement