தீ விபத்தில் 3 கூரை வீடுகள் சேதம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏற்பட்ட, தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமானது.

விழுப்புரம் அருகே வளவனுார் அம்பேத்கர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி நிர்மலா, 54; இவரது கூரை வீடு, நேற்று மதியம் 12:30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தொடர்ந்து அருகே இருந்த கருணாகரன் மகன் வசந்த், 23; சண்முகம் மனைவி அஞ்சலிதேவி, 43; ஆகியோரது வீடுகளிலும் தீ பரவியது.

அச்சமடைந்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜவேலு தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.

இதில் மூன்று வீடுகளும் எரிந்து, அதில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள், ரூ.10 ஆயிரம் எரிந்து சேதமடை ந்தது. இதுகுறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

Advertisement