ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

வில்லியனுார் : புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகளை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.

புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 2025-27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மொரட்டாண்டி ஏ.ஆர் பிளாசாவில் பதவியேற்பு விழா நடந்தது.

கவுரவ தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு தலைவர் கந்தசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பதவியேற்ற நிர்வாகிகளை வாழ்த்தினார்.

புதிய நிர்வாகிகள் தலைவராக புகழேந்தி, செயலாளராக வேலுசாமி, பொருளாளராக செபாஸ்டீன் மார்ஷல், துணைத் தலைவர்களாக கணேசன், அன்பு, துணை செயலராக கோடீஸ்வரன், இளங்கோவன், துணை பொருளாளராக அரவிந்தன், பாண்டியராஜன் மற்றும் ஒருங்கிணைப்பு குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisement