சாலையில் அடுத்தடுத்து கவிழ்ந்த வாகனங்கள்



ஓசூர், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், நேற்று மாலை, 4:30 மணிக்கு சென்ற கன்டெய்னர் லாரி, பிக்கப் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.


இதில் அவ்வழியாக சென்ற காரும் விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணித்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய லாரி, சாலையோரம் கவிழ்ந்து கிடந்தது. கார் மற்றும் பிக்கப் வாகனம் சாலையில் நின்றதால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில், சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement