விஜயலட்சுமிக்கு காத்திருக்கிறது 'மணக்க மணக்க' ஒரு எதிர்காலம்!

'இதுவரை வாழ்க்கை நல்லபடியாக நகர்ந்து விட்டது. இனி வரும் நாட்களிலும் நல்லபடியாக நகரும்'

- பூ வியாபாரம் செய்யும், உக்கடத்தை சேர்ந்த விஜயலட்சுமியின் வாழ்க்கை, இந்த நம்பிக்கையில்தான் நகர்கிறது.

''வாடகை வீட்ல தான் இருக்கோம். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. மூத்தவ காலேஜ் முடிச்சுட்டா. ரெண்டாவது ஆளு ஏழாம் வகுப்பு படிக்குறா. வயசான அப்பா அம்மாவை கவனிக்கணும். என்னோட சேத்து குடும்பத்துல அஞ்சு பேரு,''

''எப்படி சமாளிக்கிறீங்க...,?''

''20 வருஷமா, பூ யாபாரம் பண்ணிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு 300 ரூபால இருந்து 500 ரூபா வரைக்கும் கிடைக்கும். இவ்வளவு தான் வரும்னு சொல்ல முடியாது. முக்கியமான நாட்கள்ல, திருவிழா காலங்கள்ல கொஞ்சம் காசு கையில நிக்கும். அவ்வளவுதான்,''

''அடுத்த கட்டத்துக்கு போக என்ன திட்டம் வச்சிருக்கீங்க?''

''கடன்ல தான் வாழ்க்கை ஓடிட்டே இருக்கு. இன்னிக்கு வர்ற வருமானத்த வெச்சு, நாளைக்கு பூ வாங்கி கட்டி விற்பனை செய்யணும். இப்படியே காலம் ஓடுது. பெரிய கடை வெக்கணும்னு ஆசையெல்லாம் இருக்கு. கடவுள் தான் வழி காட்டணும்,''

Advertisement