ஓரணியில் தமிழ்நாடு' பணியாளர்கள் 890 பேருக்கு டேப்லெட் வழங்கல்
கிருஷ்ணகிரி, தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை, தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதையடுத்து மாவட்டந்தோறும், தி.மு.க.,வினர் பிரசாரம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வுக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளில் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார பணியில் ஈடுபட்டுள்ள, 890 பேரை ஊக்குவிக்கும் வகையில், 'ஆன்ட்ராய்டு டேப்லெட்' வழங்கி மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் 'ஓரணியில் தமிழ்நாடு' என அறிவித்து, கட்சி பாகுபாடின்றி அனைவரையும் இணைக்க கூறியிருக்கிறார்.
அது உங்களது முதல் பணி. இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி முகவர்கள் உட்பட அனைவருக்கும், 'டேப்லெட்' வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் இசை, கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லம் வேல்மணி, மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி, பொருளாளர் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை