தாங்கல் ஏரி சீரமைப்பு

வாலாஜாபாத்:நத்தாநல்லுார் தாங்கல் நீர் பிடிப்பு பகுதியில் துார்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. பருவ மழைக்காலத்தில் முழுதுமாக நிரம்பினால் அப்பகுதியில் உள்ள 80 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்நிலையில் ஏரி பல ஆண்டுகளாக துார் வாராததால், நீர் பிடிப்பு பகுதிகள் துார்ந்து உள்ளது. இதனால் ஏரியை துார்வாரி சீர் செய்ய அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதி தனியார் நிறுவன சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், தாங்கலில் உள்ள கோரை புற்கள் அனைத்தும் அகற்றப்பட்டு துார்வாரி சீரமைப்பு பணி நடந்தது.

Advertisement