கோமாரி தடுப்பூசி முகாம்



டி.என்.பாளையம், டி.என்.பாளையம் ஒன்றிய கால்நடை மருத்துவமனை சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. வட்டார மருத்துவர் பகவதி மேற்பார்வையில், கணக்கம்பாளையம் அருகே பகவதிநகரில் நடந்தது.


நுாற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, கள்ளிப்பட்டி மருத்துவர் கல்பனா தலைமையிலான ஊழியர்கள் ஊசி செலுத்தினர். டி.என்.பாளையம் ஒன்றிய பகுதிகளில் வரும், 31ம் தேதி வரை முகாம் நடக்கிறது.

Advertisement