கரையோரம் விவசாயிகள் போராட்டம் அடுக்கிய மணல் மூட்டைகள் அகற்றம்

சங்ககிரி, சங்ககிரி அருகே புள்ளாகவுண்டம்பட்டி, சீரங்க கவுண்டம்பாளையத்தில், காவிரி ஆற்றில் ஓடும் நீர், கழிவுநீர் ஓடை வழியே வெளியேறும் நீரை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் பாசன கால்வாய் திட்டம் மூலம் குழாய் பதிக்க, உயர்நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்ற சில விவசாயிகள், காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுக்க, குழாய் பதிக்கும் பணி செய்ய வேண்டும் என, கழிவு

நீர் ஓடையில் மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறாமல் தடுத்தனர்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி, காவிரி கரையோரம், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், போராட்டம் நடத்தினர். இதை அறிந்து, அங்கு சென்ற தேவூர் போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது மணல் மூட்டைகளை அகற்ற வலியுறுத்தினர். பின் போலீசார் அறிவுறுத்தல்படி, மணல் மூட்டை
களை வைத்த பிரகாசம் உள்ளிட்டோர், உடனே அகற்றிக்கொண்டனர். இதனால் விவசாயி
கள் கலைந்து சென்றனர்.

Advertisement