மேலப்பாளையம் முச்சிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
கரூர், கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லை அரசு கருப்பண்ண சுவாமி, முச்சிலியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்ததையடுத்து நாளை (7ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு புலியூர் காளியம்மன் கோவிலில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதலாவதாக பறை இசை, கொடி அணிவகுப்பு, ட்ரம்ப் செட், சாமி நடனம், பசு, யானை, குதிரைகள், காளை மாடுகள், ஒட்டகங்கள், இளைஞர்களின் சலங்கைஆட்டம், கலசத்துடன்கூடிய வெற்றிலை தேர், மங்கள இசை, கன்னிதீர்த்தம், தம்பதியர் தீர்த்தம், முளைப்பாரி, கரக முளைப்பாரி, பம்பை உடுக்கை என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.
மாலையில் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, யாகம், வாஸ்து சாந்தி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு சாந்தி ஹோமம், திஷா ஹோமம், கோபூஜை, மாலை, 5:00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று ( 6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, அனைத்து மூர்த்திகளுக்கும் எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சி, நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு செந்தில்கணேஷ்- ராஜலெட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக நாளை 7ம் தேதி காலை 5:30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் தட்டையநாட்டு புலியூர் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்