வெடால் ஏரியில் பழுதான மதகு வீணாக வெளியேறும் தண்ணீர்

செய்யூர்:வெடால் ஏரியில் பழுதான மதகுகளால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி மற்றும் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
இரண்டு ஏரிகளும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
ஏரி நீர் மூலமாக 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரி மதகுகள் வாயிலாக கால்வாய்களுக்கு செல்கின்றன.
இங்குள்ள இரண்டு ஏரி மதகுகளும் பராமரிப்பு இன்றி சேதமடைந்து உள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியில் போதைய தண்ணீர் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெடால் பகுதியில் இரண்டு போகம் நெல் பயிரிடப்பட்டு வந்தது.
இரண்டு ஏரி மதகுகளும் சேதமடைந்து உள்ளதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அடுத்த பருவத்திற்கு தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் தற்போது ஒருபோகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.
விவசாயம் செய்ய பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், சேதமடைந்துள்ள ஏரி மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்