க.கா., மனைவியால் தொழிலாளி தற்கொலை

திருப்பத்துார், திருப்பத்துார் மாவட்டம் தோரணம்வதி நாயக்கனுாரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 30; இவரின் மனைவி லட்சுமி, 25; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். லட்சுமி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன்


கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த பழனி, கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தினார். லட்சுமியோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்தார். இது தொடர்பாக தம்பதிக்குள் நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பழனி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement