ரிதன்யா வழக்கில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அவிநாசி; திருமணமாகி இரண்டே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட அவிநாசியை சேர்ந்த ரிதன்யா, 27, வழக்கில், அவரது இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஹிந்து திராவிட மக்கள் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் நேற்று அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குற்றவாளிகள் மீது ஜாமினில் வெளிவர இயலாத வகையில் வழக்குப்பதிய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஹிந்து திராவிட மக்கள் கட்சி தேசிய தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார்.

ஹிந்து அதிரடிப்படை தலைவர் ராஜகுரு, ஹிந்து சமத்துவ கட்சி பூபாலன், ஹிந்து பாரத் சேனா, சஷ்டி ஹிந்து மக்கள் இயக்கம், சிவசேனா - யு.பி.டி., சித்தர் நெறி மறுமலர்ச்சி பேரவை, தென்னிந்திய பார்வர்ட் பிளாக், ஹிந்து பாதுகாப்பு படை, சாதுக்கள் பேரவை உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

Advertisement