பெற்றோருக்கான பாத பூஜை விழா

திருப்பூர்; திருப்பூர், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், பாலவிகாஸ் பெற்றோர்களுக்கான பாத பூஜை நிகழ்ச்சி, 15 வேலம்பாளையம், பி.டி.ஆர்., நகர் முதல் வீதி விரிவு பகுதியில் நடந்தது.

காலை சாய்பஜனையை தொடர்ந்து, ராம்நகர் சமிதி அமைப்பாளர்கள் வரவேற்றனர். திருப்பூர் மாவட்ட தலைவர் சிறப்புரை ஆற்றினார்.

பெற்றோர் மற்றும் குழந்தைகள் கலந்துரையாடலை தொடர்ந்து, பெற்றோருக்கு பாத பூஜை நிகழ்வு நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் பெற்றோர் பலர் பங்கேற்றனர். மதியம் மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Advertisement