பம்மாய் அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

வாலாஜாபாத்:நத்தாநல்லுாரில், பம்மாய் அம்மன் கோவிலில் நேற்று, கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்திற்கு சொந்தமான பம்மாய் அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் பம்மாய் அம்மனை கிராம தேவதையாக வழிபடுகின்றனர்.

இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி மாதம் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அப்பகுதியில் உள்ள வினாயகர், மாரியம்மன், எல்லையம்மன் கோவில்களில் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு கங்கையில் இருந்து எல்லை கரகம் புறப்பாட்டை தொடர்ந்து, அம்மன் குடம் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மதியம் 2:00 மணிக்கு பம்மாய் அம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.

Advertisement