'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்'

திண்டுக்கல் : 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பு : அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் ஜூலை 15 ம் தேதி முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். அதனடிபடி, திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 112 முகாம்கள் 15 ம் தேதி முதல் தொடங்கி ஆக., 14 வரை நடக்கிறது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 46,ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். முகாமில், பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, இன்று முதல் தொடங்குகிறது. பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

Advertisement