நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி பூஜை

கமுதி: -கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

யோகா நரசிம்மருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து யோக நரசிம்மருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி, கோட்டைமேடு சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement