ரூ.4 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரியர்கள் 3 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.8 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 400 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ராஜனுகுண்டே என்ற பகுதி உள்ளது. இங்கு நைஜீரியர்கள் சிலர் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சி.கே. பாபா கூறியதாவது:
நம்பகமான உளவுத்துறை தகவல் அடிப்படையில் எங்களது குழு, வெளிநாட்டினரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, சிலரை அடையாளம் கண்டது. அதன்படி, நைஜீரியர்கள் 3 பேர் மருத்துவ விசாக்களில் இந்தியா வந்துள்ளனர்.
அவர்கள் போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டு இங்கு தங்கியிருப்பதை அறிந்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் இருந்த 2.8 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் 400 கிராம் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்துள்ளோம்.இவர்களது கடத்தல் நெட்வொர்க் எங்கிருந்து தொடங்குகிறது என்றும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு பாபா கூறினார்.

மேலும்
-
தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி
-
அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி
-
ராமதாஸ் தலைமையில் பா.ம.க., செயற்குழு; நிர்வாகிகளை தடுப்பதில் அன்புமணி தீவிரம்
-
ஜாமின் ரத்து மனு அரசு தரப்பு பதில் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
மதுரை மாநகராட்சியின்மண்டல தலைவர்கள் ராஜினாமா அமைச்சர் நேரு விசாரணைக்குப்பின் முதல்வர் உத்தரவு
-
ரயில் சேவையில் மாற்றம்