மதுரை மாநகராட்சியின்மண்டல தலைவர்கள் ராஜினாமா அமைச்சர் நேரு விசாரணைக்குப்பின் முதல்வர் உத்தரவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் விதிமீறி ரூ. பல கோடி வரிவிதிப்பு முறைகேடு நடந்தது தொடர்பாக மேயர் இந்திராணி, 5 மண்டல தலைவர்களிடம் அமைச்சர் நேரு நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.இதைத்தொடர்ந்து மண்டல தலைவர்கள் 5 பேரையும் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் வணிக கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ததில் 2023 -2024 ல் ரூ.பல கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து 5 பில் கலெக்டர்களை அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் சஸ்பெண்ட் செய்தார்.

இவ்விவகாரத்தில் வரிவிதிப்பு குறித்த கமிஷனரின் பாஸ்வேர்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் மீண்டும் விசாரணை மேற்கொள்ள தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியளித்தார்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் பத்து நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். மாநகராட்சி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர், மண்டலம் 3ன் தலைவரின் நேர்முக உதவியாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, 5 மண்டல தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த நேரு, மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகராட்சி நிர்வாக இயக்குநர் மேகநாத ரெட்டி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் உடன் இருந்தனர்.

வாசுகியை சில ↔தொடர்ச்சி 7ம் பக்கம்நிமிடங்களில் சென்றுவிடுமாறு தெரிவித்தனர். சில மண்டலத் தலைவர்களிடம் இரண்டு முறையும், ஒருவரிடம் மூன்று முறையும் அழைத்து விசாரணை நடத்தினர். கடைசியாக 4 மண்டல தலைவர்களை ஒன்றாக வைத்தும் விசாரணை நடந்தது. மாலை 6:50 மணியளவில் மேயர் இந்திராணியும் ஆஜரானார். அவரிடம் 20 நிமிடங்கள் விசாரணை நீடித்தது.

ராஜினாமா கடிதம்



மண்டல தலைவர்கள் சிலர் கூறுகையில், எங்களுக்கும் வரிகுறைப்பு முறைகேட்டிற்கும் சம்பந்தம் இல்லை. தவறு செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்கிறேன்' என கடிதம் கேட்டனர். கொடுத்துள்ளோம். இதுபோல் நிலைக் குழு தலைவர்கள் இருவரும் கடிதம் அளித்தனர். மேயரிடம் கடிதம் பெறவில்லை. அவரை அமைச்சர் நேரு எச்சரித்து அனுப்பினார் என்றனர்.

இந்நிலையில் 5 மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய சொல்லி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ஏற்கனவே அமைச்சர் நேருவிடம் அனைவரும் ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பதால் அது ஏற்கப்பட உள்ளது.

@block_B@

அவசர அழைப்பு

நேரு விசாரணை நடத்தவுள்ள தகவல் மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களுக்கு மாநகராட்சியில் இருந்து தனித்தனியே 'வாட்ஸ் ஆப்' மூலம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் ஆஜராகினர். விதிமீறி வரியை குறைத்தது தொடர்பாக ஆவணங்கள் அடங்கிய 7 பைல்கள் விசாரணை அறைக்குள் கொண்டுசெல்லப்பட்டன. அதன் நகல்களை வைத்து ஒவ்வொரு மண்டல தலைவர்களிடமும் விசாரணை நடந்தது.block_B

Advertisement