வளர்ந்த நாடுகளில் ஜனநாயக செயல்பாடு மீது மக்கள் அவநம்பிக்கை: சர்வே முடிவில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: செல்வ செழிப்புள்ள 12 நாடுகளில் ஜனநாயகம் செயல்படும் விதத்தில் 65 சதவீதம் பேர் அதிருப்தியில் உள்ளதாக, சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் பி.இ.டபிள்யூ., ஆராய்ச்சி மையம், கடந்த 2017ம் ஆண்டு முதல் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 12 செல்வசெழிப்புள்ள நாடுகளில் ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் பார்வை எவ்வாறு உள்ளது என்று ஆய்வு செய்து வருகிறது.
அந்த ஆய்வின் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த 12 நாடுகளில் பொதுமக்கள் 65 சதவீதம் பேர், ஜனநாயகம் செயல்படும் விதத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் மட்டுமே, ஜனநாயக செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளில், ஜனநாயகத்தின் செயல்பாட்டில் மக்களின் ஒட்டுமொத்த திருப்தி குறைந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
2017ம் ஆண்டில், இந்த நாடுகளில் உள்ள பெரியவர்களில் 49 சதவீதம் பேர் தங்கள் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் திருப்தி அடைந்தனர்.
அதே நேரத்தில் அதே அளவு 49 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. கோவிட் தொற்றுநோய் காலத்தில் மக்கள் மனநிலை, ஜனநாயக செயல்பாடு பற்றி திருப்தி நிலைக்குத் திரும்பியது. ஆனால் அதன் பின்னர் மேலும் குறைந்துவிட்டது.
ஐரோப்பாவில் ஜனநாயகத்தின் மீதான திருப்தி பரவலாக வேறுபடுகிறது.
ஸ்வீடன் நாட்டில் 75% பேர் திருப்தி அடைந்திருப்பதாக கூறுகின்றனர் ஆனால் கிரீஸ் நாட்டில் 19 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடைவதாக கூறுகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் 63 சதவீதம் பேர் தங்கள் ஜனநாயகத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் 36 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் மக்கள், தங்கள் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் ஒப்பீட்டளவில் மகிழ்ச்சியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும்
-
நில அளவை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்
-
முதியவரை தாக்கி பணம் பறித்த இருவருக்கு காப்பு
-
நாயை தொடர்ந்து மனிதன் அச்சத்தில் ஆடு வளர்ப்போர்
-
தமிழ் வளர்ச்சி துறை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு
-
விஷ பாம்பு கடித்ததில் ஆபத்தான சிறுவன் ஜி.எச்.,ல் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்
-
குறைதீர் கூட்டத்தில் 320 மனுக்கள் ஏற்பு