நாயை தொடர்ந்து மனிதன் அச்சத்தில் ஆடு வளர்ப்போர்

சென்னிமலை :சென்னிமலை யூனியன் பகுதியில் ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

தெருநாய்களின் வெறியாட்டத்துக்கு கடந்த மாதம் வரை ஆடுகள் பலியாகின. தற்போது திருடர்களால் ஆடு களவாடப்படுவது தொடங்கியுள்ளது.

முருங்கத்தொழுவு ஊராட்சி கிழக்கு புதுப்பாளையம், பாப்பாங்காட்டு தோட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார், தனது தோட்டத்தில் வளர்த்து வரும் ஒரு வெள்ளாடு, இரு குட்டிகளை கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள், ஆடு மற்றும் குட்டிகளை திருடி சென்று விட்டனர். இதுபற்றி சென்னிமலை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கிராம பகுதிகளில் அடையாளம் தெரியாத வெளியூர் நபர் அல்லது சந்தேகத்துக்கு உரிய வகையில் யாரேனும் சுற்றித் திரிந்தால், உடனடியாக சென்னிமலை போலீசுக்கு தகவல் அளிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement