விஷ பாம்பு கடித்ததில் ஆபத்தான சிறுவன் ஜி.எச்.,ல் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்
ஈரோடு:ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரை சேர்ந்த கூலி தொழிலாளி சேகரின் மகன் ஜெயசூர்ய குமார், 11; ஆறாம் வகுப்பு மாணவன். கடந்த மாதம், 26ம் தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, ஜெயசூர்யகுமாரை கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது.
அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுய நினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். சிறுவனுக்கு விஷ முறிவு மருந்து வழங்கி, இரு நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்தனர். பிறகு விஷ முறிவு மருந்துகள் வழங்கி, 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமடைந்து சிறுவன் வீடு திரும்பினார்.
இதுபற்றி, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா கூறியதாவது: கட்டுவிரியன் பாம்பு கடித்தால் கடும் வயிற்று வலி ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதித்து உயிரிழப்பு ஏற்படும். எனவே பாம்பு கடித்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டதால் குணமடைந்தார். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்
-
தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி
-
அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி
-
ராமதாஸ் தலைமையில் பா.ம.க., செயற்குழு; நிர்வாகிகளை தடுப்பதில் அன்புமணி தீவிரம்