பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஒயர் விற்றோர் கைது
சென்னை, ஜூலை 8-
பிரபல நிறுவனங்களின் பெயர்களில், போலி எலக்ட்ரிக் பொருட்கள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புல்சிங், 26, பகவத் சிங், 22, பரூக்கான், 23. இவர்கள் 'பாலிகேப்' என்ற முன்னணி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, போலியான ஒயர்களை விற்பனை செய்துள்ளனர்.
இவர்களை, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். இவர்கள் டில்லியில் இருந்து, போலி ஒயர்களை வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து, 96,500 ரூபாய் மதிப்பிலான போலி ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக்குமார், 48. இவர், ஹரியானாவில் இருந்து 'வோல்டேஜ் ரெகுலேட்டர்' வாங்கி வந்து, அது 'கிர்லோஸ்கர்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது என, ஸ்டிக்கர் ஒட்டி, சவுகார்பேட்டை பகுதியில் விற்று வந்துள்ளார்.
இவரையும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து, 52,200 ரூபாய் மதிப்பிலான போலி வோல்டேஜ் ரெகுலேட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்
-
காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
-
ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி நான்கு பேர் மீது வழக்கு பதிவு
-
பேயை விரட்டுவதாக கூறி அடித்ததில் பெண் பலி
-
நாவல் பழம் தின்று 7 மாணவர் பாதிப்பு
-
பணமில்லா பரிவர்த்தனை : கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு
-
அரசு முதுகலை விரிவாக்க படிப்பு மையத்திற்கு... மூடுவிழா; மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி