மடிக்கணினி திருடிய இன்ஜி., கைது

திருமங்கலம்: விடுதியில் மடிக்கணினி திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரோஷன், 22; இன்ஜினியரிங் பட்டதாரி. திருமங்கலம், காந்தி தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, கணினி வகுப்பிற்கு சென்று வருகிறார்.

ஜூன் 29ம் தேதி, இவரது மடிக்கணினி திருட்டு போனது. திருமங்கலம் போலீசாரின் விசாரணையில், அதே விடுதியில் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த கிரிபிரசாத், 32, என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், பொறியாளரான இவர் 'ஆன்லைன் டிரேடிங்' தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டதால், விடுதியில் தங்கியிருப்போரின் போன், மடிக்கணினியை திருடி விற்று செலவு செய்தது தெரியவந்தது.

Advertisement