தொழிலாளிக்கு கத்திக்குத்து டிரைவர் மீது வழக்கு பதிவு

கரூர், சின்னதாராபுரம் அருகே, கூலி தொழிலாளியை கத்தியால் குத்திய டிரைவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பி.செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 60; கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துசாமி, 44; என்பவருக்கும் இடையே, ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.


இந்நிலையில் கடந்த, 5ம் தேதி இரவு பெருமாளுக்கும், முத்துசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரண்டு பேரும், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது, கத்தியால் பெருமாள் தலை மற்றும் முகத்தில், முத்துசாமி குத்தியுள்ளார்.
அதில், படுகாயம் அடைந்த பெருமாள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, பெருமாள் அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் முத்துசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement