நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்



கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பொருளாளர் மோகன் வரவேற்றார். செயலாளர் பிரகாஷ் கோரிக்கை குறித்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், செயலாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர். மாவட்ட இணை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், வெளி முகமை மூலம், புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை, 297ஐ ரத்து செய்து, 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை, 420ஐ திரும்ப பெற வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பினர்.

Advertisement