சோலார் பேனல் சிறப்பு முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளின் கூரையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் ஜூலை 9ல் விருதுநகர் அம்பாள் திருமண மண்டபத்தில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது.

இதில் சோலார் பேனல் நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை, வங்கி கடன் உதவி, அரசு மானியம் குறித்து முகாமில் விளக்கப்படும் என விருதுநகர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

Advertisement