முதல்வர் படத்தை காட்டி உதவி கேட்ட மாற்றுத்திறனாளி
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர்பொற்கொடி, தரைத்தளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.
காரைக்குடி ரோஸ்நகர்சித்திக் என்ற மாற்றுத்திறனாளி மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் கேட்க காத்திருந்தார். இவரிடம் மனு பெற வந்த கலெக்டரிடம், தன்னுடைய அலைபேசியில் முதல்வர் ஸ்டாலினுடன் இருப்பது போன்ற படத்தை காண்பித்து, தான் தீவிர தி.மு.க., விசுவாசி.
முதல்வரை சந்தித்து போட்டோ எடுத்துள்ளேன். எனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கலெக்டர், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் கேளுங்கள். எதற்காக அலைபேசியில் போட்டோவை காட்ட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அதிகாரி கூறியதாவது:
சித்திக் என்பவர் ஏற்கனவே மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். அடுத்து 10 ஆண்டுக்கு பின் 2025 அக்., தான் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துவிட்டோம், என்றார்.
மேலும்
-
நவீன்குமாரிடம் நலம் விசாரித்த நடிகர் விஜய்
-
நாமக்கல்லில் ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'குட்பை' உணவு டெலிவரிக்கு 'சாரோஸ்' புதிய செயலி துவக்கம் 'சாரோஸ்' புதிய செயலி அறிமுகம்
-
தேர்தல் பிரசாரத்தை துவக்கினார் பழனிசாமி
-
பாலத்தில் தவறி விழுந்து ஓய்வு எஸ்.ஐ., உயிரிழப்பு
-
பைக் - லாரி மோதிய விபத்தில் தம்பதி பலி
-
கோட்டை மாரியம்மனுக்கு புதிய தேர் வௌ்ளோட்டம்