உசிலம்பட்டியில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நாலுகரைபுத்துாரில் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.சுவாமி போர் கோலத்தில் காலில் தண்டை, பாதரட்சை, இடுப்பில் கத்தி அணிந்து காட்சியளிக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து, 19 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி ஜூலை 5 ல், கணபதி ஹோமத்துடன் துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5:50 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளுக்குப்பின் காலை 9:00 மணிக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், தீபாரதனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மந்தையம்மன் கோயில்
நல்லுத்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 6ல், கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் பால்குடம் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை 10:00 மணிக்கு மேல் புனிதநீரால் கோபுர கலசங்களில் அபிஷகேம் செய்தனர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடரந்து அன்னதானமும் நடந்தது.
மேலும்
-
அரசு கல்லுாரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்க அனுமதி
-
சி.ஏ., தேர்வில் 45வது ரேங்க் சாதித்தார் திருச்சி மாணவர்
-
எட்டு நாட்களுக்குப் பின் 4 லட்சத்தீவு மீனவர்களை இலங்கை மீட்டது
-
மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக மோசடி ரூ. 4.19 கோடி சுருட்டியவர் கைது
-
ஆண்டிபட்டி அருகே போதை மாத்திரை கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
-
மதுக்கடையில் தீப்பெட்டி தகராறு; கத்தியால் குத்தி ஒருவர் கொலை