பொக்லைன் வாகன உரிமையாளர்கள் போராட்டம்



பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், 100க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் கட்டுமான தொழில், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த, 2 ஆண்டுகளில் இந்த வாகனங்களின் காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை கடும் உயர்வு,

சாலை வரி உயர்வு, ஓட்டுனர் கூலி உயர்வு போன்றவற்றால் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். சாலை வரி, காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும், பாப்பிரெட்டிப்பட்டி பொக்லைன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர், நேற்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோட்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம், 3 நாட்கள் நடக்கிறது.

Advertisement