கருப்பு பட்டை அணிந்து நிலஅளவையர் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் திவ்யா வரவேற்றார்.
அவுட்சோர்ஸிங் முறையில் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மூன்றாண்டுகளுக்கு அனுமதி அளிக்கும் அரசாணை 420 ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். நிலஅளவை பதிவேடுகள் துறை அமைச்சு பணியாளர் சங்க தலைவர் சின்னச்சாமி, புலஉதவியாளர் சங்க மகளிரணி மாநிலதலைவி வெங்கடேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜாமணி உட்பட பலர் பங்கேற்று பேசினர். மாநில செயலாளர் முத்துமுனியாண்டி சிறப்புரை நிகழ்த்தினார். பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
மேலும்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்
-
தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி
-
அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி
-
ராமதாஸ் தலைமையில் பா.ம.க., செயற்குழு; நிர்வாகிகளை தடுப்பதில் அன்புமணி தீவிரம்