குழாய் உடைந்து குடிநீர் வீண்

தேனி: ஆண்டிபட்டி ஒன்றியம் குன்னுார் ஊராட்சி வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கரையில் தண்ணீர் தொட்டி அமைத்து அங்கிருந்து ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள ஆரம்பபள்ளி தெருவில் பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் சென்றது.இது பற்றி ஊராட்சி செயலாளரிடம் கேட்ட போது, ்குழாய் உடைந்திருந்தது சீரமைத்தோம். குழாய் உடைந்திருந்தால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement