கம்பம் கால்நடை மருந்தகத்திற்கு ரூ.12 லட்சம் மதிப்பில் ஸ்கேன் வசதி
கம்பம்: கம்பம் கால்நடை மருந்தகத்திற்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது .
தேனி மாவட்டத்தில் வேளாண்,- தோட்டக்கலை சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். மாவட்டத்தில் போடி, அல்லிநகரம், பெரியகுளம் ஆகிய ஊர்களில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளது. மற்ற ஊர்களில் கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் செயல்படுகின்றன.
கால்நடை மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளுடன் அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது. மருந்தகங்களில் அந்த வசதிகள் இல்லை. கம்பம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த 15 ஆண்டுகளுக்கு முன்பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
தற்போது முதன் முறையாக ஆண்டிபட்டிக்கு அடுத்து கம்பம் கால்நடை மருந்தகத்திற்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி துணை இயக்குனர் (கால்நடை இனப்பெருக்கம் ) மையத்தில் ஸ்கேன் உள்ளது.
ஸ்கேன் மூலம் பசுக்களின் சினைப் பிடிக்காததற்கான காரணங்கள், சினை உறுதி செய்வது, நாய், பூனைகளின் சினையில் உள்ள குட்டிகளின் நிலை அறிந்து கொள்வது, பிற நோய்களை கண்டறிய பயன்படும். மாவட்டத்தில் உள்ள மூன்று கால்நடை மருத்துவமனைகளில் கூட ஸ்கேன் வசதி இல்லை. இந்நிலையில் கம்பம் மருந்தகத்திற்கு ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆடு, மாடு, நாய், பூனைகள் வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் கம்பம் கால்நடை மருந்தகத்திற்கு சென்று இலவசமாக ஸ்கேன் செய்து அதற்குரிய சிகிச்சையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கம்பம் கால்நடை டாக்டர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
இதுவரை 17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்
-
மாநில அட்யா பட்யா விளையாட்டு போட்டி கடலுார் மாவட்ட அணிக்கு சான்று வழங்கல்
-
தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் மாணவி பதக்கம் வென்று சாதனை
-
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்
-
கடலுாரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
-
நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்