ஜார்க்கண்டில் தொடரும் நக்சல் வேட்டை: 5 பதுங்கு குழிகள் தகர்த்து அழிப்பு

சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிப்பு வேட்டையின் போது 5 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களை நக்சல்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாதுகாப்பு படையினர் தினமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல்கள், பாதுகாப்பு படையினரின் தீவிர வேட்டையால் சரண் அடைந்து வருகின்றனர்.
இந் நிலையில், ஜார்க்கண்ட் சோட்டாநகரா பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி அதி பயங்கர நாசவேலைகளில் ஈடுபட ஆயத்தமாகி வருவதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீசாரும், நக்சல் ஒழிப்பு பிரிவினரும் ஒன்றிணைந்து அடர்ந்த காடுகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
உளவுத்துறை அனுப்பிய தகவலை மையமாக கொண்டு மேற்கு சிங்பும் மாவட்டத்தில் கூட்டு பாதுகாப்புப் படையினர் நக்சல்களை தேடினர். அப்போது நக்சல்களின் 5 பதுங்கு குழிகளை கண்டறிந்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடிபொருட்களையும், 2 குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து எஸ்.பி., ராகேஷ் ரஞ்சன் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது;
நக்சல்கள் ஒழிப்பு வேட்டையை துரிதப்படுத்தி வருகிறோம். தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக நக்சல்களில் 5 பதுங்கு குழிகளை கண்டறிந்து அழித்துவிட்டோம். 2 குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளை கைப்பற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதமடித்தார் கே எல் ராகுல்
-
ஆமதாபாத் விமான விபத்து: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் பிரச்னையை 2018ம் ஆண்டில் கண்டறிந்தது அமெரிக்கா!
-
ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியும் ஊழலில் திளைக்கும் கேரளா: அமித் ஷா சாடல்
-
காலத்தைக் கடந்து நிற்கும் காவல் அரண்மனை-செஞ்சி கோட்டை.
-
ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்