ஆமதாபாத் விமான விபத்து: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் பிரச்னையை 2018ம் ஆண்டில் கண்டறிந்தது அமெரிக்கா!

புதுடில்லி: 2018ம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் சிக்கலை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்தது. ஆனால் ஆய்வு செய்ய ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. மொத்த 15 பக்க அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது, 2018ம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் சிக்கலை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்துள்ளது என்ற தகவல் கவனம் பெற்று உள்ளது.
டிசம்பர் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது. இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. ஆனால் ஆய்வு செய்ய ஏர் இந்தியா விமானம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சுவிட்சுகள் விமானத்தின் இஞ்சின்களுக்குள் எரிபொருள் ஓட்டத்தை ஒழுங்குபடுத்து கின்றன. தரையில் உள்ள இஞ்ஜின்களை இயக்க அல்லது நிறுத்த விமானிகள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். வானில் இஞ்ஜின் செயலிழந்தால் இஞ்ஜின்களை இயக்க அல்லது மறுதொடக்கம் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அறிக்கை அறிவுறுத்தலாக இருந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிடவில்லை என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.




மேலும்
-
தங்கம் வென்றார் அஸ்வின் * இந்தியன் ஓபன் தடகளத்தில்...
-
சிம்ரன், பிரீத்தி 'தங்கம்': இந்திய ஓபன் பாரா தடகளத்தில்
-
ஹாக்கி: இந்தியா 'ஏ' அசத்தல்
-
திருமலா பால் நிறுவன அதிகாரியை போலீசார் மிரட்டவில்லை: சென்னை போலீஸ் கமிஷனர்
-
உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்: ரஷ்யா மீது தடை வேண்டும் என்கிறார் ஜெலன்ஸ்கி
-
ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை: மாணவி தீக்குளிப்பு