உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்: ரஷ்யா மீது தடை வேண்டும் என்கிறார் ஜெலன்ஸ்கி

2

மாஸ்கோ: உக்ரைன் மீது நேற்று ஒரே நாளில், 620 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.


இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று இரவு, கார்கில் மற்றும் சுமி பகுதிகளில் இருந்து உக்ரைனின் லிவிவ் மற்றும் புகோவ்ய்னா பகுதிகள் மீது ரஷ்யா கடுமையாக தாக்கியது. 26 ஏவுகணைகள் மற்றம் 597 ட்ரோன்கள் வீசப்பட்டன. இதில் 20 ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. இதற்காக உக்ரைன் வான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இருப்பினும், ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உக்ரைனில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவி அளிக்கப்படுகிறது.


ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்காக அந்நாடு மீது இன்னும் அதிக தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்யாவுக்கு ட்ரோன் வழங்குபவர்களையும், கச்ச எண்ணெயால் லாபம் அடையும் நாடுகள் மீது தடை விதிக்க வேண்டும். ட்ரோன்களை இடைமறிக்க இன்னும் முதலீடும், வான் பாதுகாப்பு அமைப்பும் தேவைப்படுகிறது. பலம் மூலம் மட்டுமே இந்த போர் நிறுத்த முடியும். வெறும் சமிஞ்கைகள் மட்டும் கூடாது. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement