ஸ்ரீ ரமண பள்ளி விளையாட்டு விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண அகாடமி சி.பி.எஸ். இ பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

பள்ளி தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆலோசகர் டாக்டர் கு. கணேசன் முன்னிலை வகித்தார். அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியார் விருது பெற்ற வாலிபால் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார். மாணவர்கள் பெற்றோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. ஏரோபிக், யோகா, பிரமிட், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், என பல்வேறு விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை முதல்வர் கல்யாணி உடற்கல்வி இயக்குனர் செந்தாமரை கண்ணன் நிர்வாக அலுவலர் ராமராஜ் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாணவர் தயா விஷ்ணு குமரன் நன்றி கூறினார்.

Advertisement