மராத்தி மொழி விவகாரம்: ஆட்டோ டிரைவரை தாக்கிய உத்தவ் கட்சியினர்

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தி பேசாத ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தக்கரேவின் நவநிர்மான் சேனா கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பஹல்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உ.பி.,யை சேர்ந்த பாவேஷ் பதோலியா என்பவருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆட்டோ டிரைவர் ஏன் மராத்தி மொழி பேசவில்லை என பாவேஷ் கேட்க, அதற்கு அவர் தனக்கு ஹிந்தி மற்றும் போஜ்புரி மட்டுமே தெரியும் என அவர் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், நேற்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் மற்றும் ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனா கட்சி தொண்டர்கள் இணைந்து விரார் ரயில் நிலையம் அருகே, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, மராத்தி மொழிக்கும், மராத்திய தலைவர்களையும் அவமதித்து விட்டதாகக் கூறி அந்த டிரைவரை கடுமையாக தாக்கினர். தொடர்ந்து அவரை, பாவேஷ் மற்றும் அவரது சகோதரியிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்தனர்.
இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. ஏராளமானோர் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ தங்களின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



மேலும்
-
'குரு சரணம்' சிறப்பு சாய் பஜன் நிகழ்ச்சி
-
களத்துார் கழிப்பறை வளாகம் மகளிர் பயன்பாட்டிற்கு திறப்பு
-
கரையெங்கும் குப்பை மலை
-
ஐந்து அலுவலர்கள் பதவிகளை நீக்கி தலைமை பொறியாளர் பதவி உருவாக்கம்
-
மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் அவசியம்
-
50 சதவீத விளையாட்டு மைதானங்கள்; நாளைக்குள் 'ஜியோ டேகிங்' பதிவு