குல்வீர் சிங் நான்காவது இடம்

புளோரிடா: அமெரிக்காவில் உலக தடகள கான்டினென்டல் 'சன்செட் டூர்' நடந்தது. 1500 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் குல்வீர் சிங் களமிறங்கினார். சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 5000, 10000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், இம்முறை 3 நிமிடம், 36.58 வினாடி நேரத்தில் வந்து, நான்காவது இடம் பிடித்தார். புரூக் பீஸ்ட் அணியின் பிரண்டன் மில்லர் (3:35.27), ஆக்லஹாமா பல்கலை., வீரர் ரியான் ஷோப்பே (3:36.13), டெக்சாஸ் வீரர் கூப்பர் (3:36.38) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
மூன்றாவது இந்தியர்
குல்வீர் சிங் 3000, 5000, 10,000 மீ., 'ஷார்ட் டிராக்' பிரிவில் 3000, 5000 மீ., என ஐந்து வித போட்டியில் பங்கேற்று, அனைத்திலும் தேசிய சாதனையாளராக உள்ளார். தற்போது ஜின்சன் ஜான்சன், பர்வேஸ் கானுக்கு அடுத்து, 1500 மீ., ஓட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய மூன்றாவது இந்தியர் ஆனார்.

Advertisement