வரப்பு பயிராக ஆமணக்கு நடவு

திருப்பூர்; தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: அனைத்து சாகுபடிகளிலும், ஊடுபயிர், வரப்பு பயிர், வேலிப்பயிர், பொறி பயிர் என சில தாவரங்களை கட்டாயமாக, பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆமணக்கு செடிகளை பராமரித்தால், அச்செடிகளின், அகன்ற இலைப்பரப்பில், புருட்டோனியா, பச்சைக்காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவனி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் ஆகியவை ஈர்க்கப்படும்.

அதிகம் தாக்கப்பட்ட, ஆமணக்கு இலைகளை, தனியாக பிரித்து, முட்டை குவியல்களை எளிதாக அழிக்கலாம்.

ஆமணக்கு, பூசண வித்துகளை காற்றின் வாயிலாக, பரவவிடாமல், தடுத்து, பயிருக்கு பாதிப்பு களை தவிர்க்கிறது. ஆமணக்கு விதைகளிலிருந்து பெறப்படும், ஆமணக்கு எண்ணைக்கு சந்தை வாய்ப்புகளும் உள்ளன.

Advertisement