பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

ஊத்துக்கோட்டை:முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக கட்டடம் பாசி படர்ந்து, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது.

எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்குள்ள குளத்துமேடு பகுதியில், 2022ம் ஆண்டு 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

தற்போது, பராமரிப்பு இல்லாததால், இந்த கட்டடத்திற்கு வரும் மின் இணைப்பு கம்பி தொங்கியபடி உள்ளது.

தண்ணீர் தொட்டியில் இருந்து ஒழுகும் தண்ணீரால், கட்டடம் முழுதும் பாசி படர்ந்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் கட்டடம் சேதமடையும் நிலைமை உள்ளது.

எனவே, எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகள், கன்னிகைப்பேர் சுகாதார வளாகத்தை ஆய்வு செய்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement