வகை வகையாக வந்திறங்கிய மீன் களைகட்டியது காசிமேடு சந்தை

காசிமேடு;காசிமேடில், நேற்று வகை வகையாக வந்திறங்கிய மீன் வகைகளை, மக்கள் உற்சாகத்துடன் வாங்கி சென்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதற்கேற்றார்போல, 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நேற்று கரை திரும்பின. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, விதவிதமாக சிறிய ரக மீன் வகைகள் வரத்து அதிகம் இருந்தது.
கானாங்கத்த, வாலை, சங்கரா உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
இதனால், ஒரு சிலர் சேர்ந்து, இரண்டு மூன்று வகை மீன் வகைகளை மொத்தமாக வாங்கி, பங்கிட்டு எடுத்து சென்றனர்.
மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், மீன் விலையும் கணிசமாக உயர்ந்தது. பேரம் பேசி மக்கள் வாங்கி சென்றனர்.
அதேநேரம், சூரை உள்ளிட்ட பெரிய ரக மீன் வகைகள் குறைவாகவே விற்பனைக்கு வந்தன. அவற்றை வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து விசைப்படகு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது, 'விசைப்படகிற்கு, 8 லட்சம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு அனுப்பினேன். 15 நாட்கள் தங்கி மீன் பிடித்து வந்துள்ளனர். 6 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே மீன் விற்பனையானது.
டீசல் போக 1 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அதிகம் விற்பனைக்கு செல்லும் சூரை மீன் கிடைக்கும் என எதிர்பார்த்து சென்ற நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது' என்றார்.
காசிமேடில் இந்தவாரம் மீன் வரத்து அதிகம் இருந்தது. கறுப்பு வவ்வால் 750 ரூபாய்க்கும்; சங்கரா 400 ரூபாய்க்கும் வாங்கினேன். கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 15 சதவீதம் விலை குறைந்திருந்தது.
-- ப.ரேவதி, 32,
வண்ணாரப்பேட்டை.
மீன் விலை நிலவரம்
வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 700 - 1,300
கறுப்பு வவ்வால் 400 - 800
வெள்ளை வவ்வால் 7,00 - 1,200
பாறை 200 - 400
கடல் விரால் 250 - 500
சங்கரா 250 - 500
தும்பிலி 200 - 250
கானாங்கத்த 200 - 250
கடம்பா 200 - 300
செருப்பு 200 - 250
நெத்திலி 200 - 250
வாளை 100 - 150
இறால் 250 - 400
டைகர் இறால் 1,000 - 1,100
நண்டு 200 - 300
மேலும்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு