தென்னையில் அதிகரித்த வெள்ளை ஈக்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார தென்னை விவசாயிகள் சுருள் வெள்ளை ஈக்கள் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துஉள்ளது.

ராஜபாளையம், தேவதானம், சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி தென்னை விவசாயம் நடக்கிறது. இவற்றில் 50 சதவீத பரப்பில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து படுத்த முடியாத படி பரவி வருவதால் விவசாயிகள்செய்வதறியாது தவிக்கின்றனர்.

வெள்ளை ஈக்கள் பாதிப்பு 2016 முதல் பரவ துவங்கியது. இதன் தாக்கத்தால் மரங்களில் பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கட்டுப்படுத்த அரசு கூறும் வழிமுறைப்படி பின்பற்றியும் பலனில்லை.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மழைபொழிவு இல்லாதது காற்றின் தாக்கம் போன்றவை இவை வேகமாக பரவுவதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு முழு வீச்சில் இறங்குவதுடன் விவசாயிகளை இணைத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement