சீரான மக்கள் தொகை கணக்கெடுப்பு: உறுதி அளித்தார் மணிப்பூர் கவர்னர்

இம்பால்: மணிப்பூரில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் சீராக நடைபெறும் என்று மாநில கவர்னர் அஜய் குமார் பல்லா இன்று உறுதி அளித்தார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில், கவர்னர் அஜய் குமார் பல்லாவை, மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சித்ரா தேவி சந்தித்து பேசினார்.
இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027-க்கான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மற்றும் திறமையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கவர்னர் தரப்பில் ஆதரவு தேவைபடுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சித்ரா தேவி கேட்டுக்கொண்டார்.
கவர்னர் அஜய் குமார் பல்லா, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கருணாநிதி சிலை மீது பெயின்ட் ஊற்றிய டாக்டர் கைது
-
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மதுரை சுற்றுலா பயணி பலி
-
இடத்தகராறில் ஒருவர் அடித்துக்கொலை
-
முருங்கைக்காய் ரூ.20க்கு விற்பனை
-
மதுக்கடையை அகற்ற ஆர்ப்பாட்டம் பால் கடையில் மது விற்பனை போலீசாரிடம் ஒப்படைப்பு
-
கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் டூர் சென்ற இளைஞர் கைது
Advertisement
Advertisement